புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பஷ மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்திபெருவிழா 
ஆலய மகா கும்பாபிஷேகமானது கடந்த  யனவரி மாதம் முப்பதாம் திகதி திங்கட்கிழமை சிவஸ்ரீ ஆதி சவுந்தர ராஜ குருக்கள் தலைமையில்  இனிதே நிறைவுபெற்றது யனவரி மாதம் 26 ம் திகதி வியாழக்கிழமை கும்பாபிஷேகத்துக்கான  பூர்வாங்க கிரியைகள் யாவும் ஆரம்பமாகி தொடர்ந்து யனவரி29 ம்  திகதி ஞாயிற்று கிழமை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு  இடம்பெற்றது இந்நிகழ்வில் அம்பிகையின் பேரருளை பெற்று கொள்ளுவதற்காக  இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அம்பிகை அடியார்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது யனவரி மாதம் 30 திகதி திங்கட்கிழமை  மீனலக்கின சுபமுகூர்த்த வேளையில் கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகி காலை 09 மணி 10 நிமிடமளவில் பிரதான தூபிக்கான அபிடேகம் இடம்பெற்று அதனை தொடர்ந்து பிரதான கும்பமானது வேத மந்திரங்கள் மங்கல வாத்தியங்கள்  முழங்க அடியவர்களின் அரோகரா கோசங்கள் முழங்க வீதிவலம் வந்து அம்பிகைக்கு அபிஷேகம்  இடம்பெற்று அதனை தொடர்ந்து பூசை இடம்பெற்று கும்பாபிஷேக கிரியைகள் இனிதே நிறைவு பெற்றன தொடர்ந்து இரவு நவசக்தி அர்ச்சனை இடம்பெற்று வசந்தமண்டப பூசை இடம்பெற்று அம்பிகைக்கு திருவூஞ்சல் இடம்பெற்று தொடர்ந்து அழகிய பூந்தண்டிகையில் அம்பிகை விநாயகர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சகிதம் வெளிவீதி வலம் வரும் நிகழ்வும் இடம்பெற்று  அன்றைய பூசைகள் யாவும் நிறைவடைந்து.
யந்திரபூஜை
ஆலய மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு முதல் கிரியையான யந்திர பூசை நிகழ்வு 10-12-2011 சனிக்கிழமை காலை10.00 மணியளவில் கும்பாபிஷேக பிரதமகுரு  சிவஸ்ரீஆதி-சௌந்தரராஜக்குருக்கள்  அவர்கள் தலைமையில் ஆரம்பமாகி தொடர்ந்து 26-01-2012 வரையில் பகல்11.00 மணிக்கு  இடம்பெற உள்ளது இவ் யந்திரபூசையினை உபயமாக ஏற்று செய்யவிரும்பும் அடியார்களை ஆலயத்துடன் தொடர்பு கொள்ளும்படி வேண்டப்படுகிறீர்கள் 


 பாலஸ்தாபனம்(புனருத்தானம்)

நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் சேதத்துக்குள்ளான அன்னையின் ஆலயத்தினை புனரமைத்து குடமுழுக்குசெய்வதற்கு அன்னையின் திருவருள் கைகூடியுள்ளது இந்தவகையில் அதற்கு ஏதுவாக கடந்த 29/01/2010 வெள்ளிக்கிழமை அன்று ஆலயத்தில்புனருத்தானம் (பாலஸ்த்தாபனம்)இடம்பெற்றுள்ளது அதனை அடுத்து ஆலய திருப்பணிகள் இடம்பெற்று அவை பூர்த்தி அடைந்தவுடன் அன்னையின் ஆலயத்திற்கு நான்காவது குடமுழுக்குஇடம்பெறும் என்பதை அம்பிகை அடியார்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்

ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி சங்காபிஷேக பெருவிழாவும் குடமுழுக்கு சிறப்பு நூல் வெளியீடும்  

30-01-2012 அன்று ஆலயத்தில் இடம்பெற்ற மகாகும்பாபிஷேகத்தினை தொடர்ந்து 48நாட்கள் நடைபெற்ற மண்டலாபிஷேகத்தின் இறுதிநாளான சங்காபிஷேக பெருவிழா கடந்த17-03-2012 அன்று சனிக்கிழமை காலை 07.30 மணிமுதல் விநாயகர் வழிபாடு யாகசாலா பிரவேசம் யாகபூஜை சங்குபூஜை விசேட திரவிய கோமம் திரவிய அபிஷேகம் கும்ப உத்தாபனம் சங்காபிஷேகம் என்பன இடம்பெற்று பகல் மணிக்கு விசேட பூஜை இடம்பெற்று மகேஸ்வர பூசை என்பன இடம்பெற்று பகல் பூசைகள் நிறைவுற்று மாலை விசேட வசந்தமண்டப  பூசை இடம்பெற்று திருவூஞ்சல் இடம்பெற்று athanayadththu அம்பிகை விநாயகர் சுப்பிரமணியர் சமேதராக அழகிய பூந்தண்டிகையில் வீதியுலா வந்ததை தொடர்ந்து 
பிரசாதம் வழங்கலுடன் அன்றைய பூசைகள் நிறைவுற்றன 
குடமுழுக்கு சிறப்பு நூல் வெளியீடு 

ஆலய கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு ஆலய குடமுழுக்கு சிறப்புமலர் ஒன்று அன்று வெளியிடப்பட்டது ஆலயதகவல்கள் சக்தி வழிபாடு பற்றிய கட்டுரைகள் ஆலயத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளில் நிழற்பட தொகுப்பு மற்றும் அறிஞர் ஆன்மீக வாதிகளின் கட்டுரைகள்  போன்ற பல விடயங்களை தாங்கி இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது ஆலய அறங்காவலர் சபை தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல அடியார்கள் பங்கு கொண்டு இந்நூலை பெற்று சென்றனர்  

 

Make a free website with Yola