இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில் திருப்பணி நிதி கோரிக்கை
 யாழ்ப்பாண சித்தர் பரம்பரை தவமுதல்வர் யோகர் சுவாமிகளே இக்கோவிலின் கருவறை நிலையத்தினையும் மூலமூர்த்தியையும் முடிவு செய்தவர் இவற்றை செயற்படுத்தியவர்கள் சுவாமிகளின் தொண்டரும் யாழ் அரச அதிபருமாகிய அமரர் ம.ஸ்ரீகாந்தா அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட திருப்பணி சபையினர் இவர்களின் முயற்சியால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இக்கோவில். யோகர்சுவாமிகளின் ஆசிர்வாதத்துடன் 1961ஆம் ஆண்டு திருக்குடமுழுக்கு செய்யப்பட்ட இவ்வாலயம் அதன்பின்னர் முறையே1981,1996 ஆம் ஆண்டுகளில் குடமுழுக்கு செய்யப்பட்டு மூன்று தேர்களும் கண்டு மூர்த்தி தலம் தீர்த்தம் முப்பெருமைகளையும் கொண்டு வன்னி பெருநிலப்பரப்பில் பாரிய வளர்ச்சி கண்ட கோவிலாக மிளிர்ந்தது இப் பெருங்கோயிலாகும். கடந்த நீண்ட கால அமைதி இன்மையால் ஆலயத்தில் இரண்டு முறை வழிபாடு பூசைகள் தடைப்பட்டுள்ளன இத்தடைகளை இடப்பெயர்வுகள் ஏற்ப்படுத்தின 1996ம் ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் உடனடியாக பூசைகளை ஏற்பாடு செய்ய முடிந்தன 2008ம் ஆண்டு இடப்பெயர்வின்பின்னர் இப்போதுதான்(2010) அறங்காவலர் சபையினரால் கோவிலை பொறுப்பேற்க கூடியதாக இருந்தது கோவிலில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பரிவார கோவில்களும் புனரமைக்க வேண்டியுள்ளன முன்னர் 1996ம் ஆண்டு குடமுழுக்கு நிகழ்ந்துள்ளதால் இனிவரும் ஆண்டு திருக்குடமுழுக்கு அமைய வேண்டிய காலமாக உள்ளது. இந்நிலையில் 29/01/2010 இல் புனருத்தானம் (பாலஸ்தாபனம்) சிறப்பாக நடந்தது பின்னர் ஆரம்பமான திருப்பணி வேலைகள் துரிதமாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றது இதுவரையில் பல மில்லியன் ரூபா செலவாகியுள்ளது இத் திருப்பணிகளுக்கு மேலும் பலமில்லியன் ரூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இக் கோவிலின் அருமை பெருமைகளை தெரிந்த வெளிமாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் உள்ள அன்பர்கள் அம்பிகை அடியார்களின் நிதியினை கொண்டுதான் இப்பணியை நிறைவு செய்யலாம் என நம்புகிறோம் அம்பாள் அடியார்கள் மனமுவந்து நிதியாகவோ பொருளாகவோ அளிக்கும் படியும் வேறு வழிகளில் உதவ முன்வரும் அன்பர்களிடம் இருந்தும் நிதியுதவி கேட்க்க பெற்று எமக்கு ஆதரவு நல்கும் படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம் இக்கோவில் வங்கி சேமிப்பு கணக்கின் இலங்கை வங்கி- கிளிநொச்சி கிளையில் 70212044 என்ற கணக்கிலக்கத்தில் வைப்பு செய்தும் உதவ முடியும்.
"அம்பாள் பணியில் அனைவரும் இணைவோம் அனைவரையும் இணைப்போம்"
 அம்பாள் பணியில் தங்கள் உதவியை வேண்டி நிற்கும் 
ஆ.க.செல்வவிநாயகம்( முன்னாள்  தலைவர் )
S.N.செல்வராசா ( தலைவர் )
ந.சிவகுமார் (செயலாளர்) 
மு.இராமச்சந்திரன் (பொருளாளர்)
நா.சோதிநாதன் (நிர்வாக செயலாளர்) 
அறங்காவலர் சபை இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில்

 

 

Make a free website with Yola