கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு வாவியின் கரைதனில் வாவியை ஆசிர்வதித்தபடி மூர்த்தி தலம்  தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று மூன்று சித்திரத்தேர்களை தன்னகத்தே கொண்ட கனகாம்பிகை அம்பாளின் ஆண்டு பௌர்ணமி பொங்கல் விழா கர வருடம் சித்திரை திங்கள் நான்காம் நாள் (17-04-2011)ஞாயிற்றுகிழமை நடைபெற  திருவருள் கூடியுள்ளது அன்று மாலை 4.00 மணியளவில் அம்பாளின் தீர்த்தமாகிய இரணைமடு வாவியில் இருந்து அடியவர்கள் கும்ப தீர்த்தமெடுத்து வந்து அம்பாளின் பாதார விந்தங்களில் உற்றுகின்ற நிகழ்வும் வளைந்து பானைகளும் ஏனைய பானைக்களுமாக ஆயிரம் பானைகள் வைத்து பொங்க வேண்டுமென்ற தவத்திரு யோகர் சுவாமிகளின் திருவாக்குபடி பொங்கல் நிகழ்வும் இடம்பெற விருப்பதால் அனைத்து அடியார்களையும் இந்த நிகழ்வில் கலந்து அன்னையின் அருள்பெற்றே குமாறு வேண்டுகிறோம் 
நேர்த்த்கிக்கடன்களை பூர்த்திசெய்ய விரும்புகின்ற  அடியார்கள் காலைமுதல் இரவு மணிவரை மேற்கொள்ளலாம் 
:::அடியார்களின் நலன்கருதி போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது
:::பொருட்கள் ஆலயத்தில் வழமைபோல வழங்குவதற்கு ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Loogix.com. Animated avatars.
அறங்காவலர் சபை
வங்கி க/கு இல
கிளிநொச்சி ஆலயங்கள்
சிறப்பு காணொளி
ஆலயப்பாடல்
விரதவிதிமுறைகள்
நவராத்திரி சிறப்பு

தேர்திருவிழா-2008
ஆலயப்பாடல்
தமிழ் விக்கிபீடியா
செய்கோள் படம்

ஈழத்து ஆலயங்கள்
இந்து சமய விழாக்கள்
தெகிவளைஆஞ்சநேயர்
இரணைமடுக்குளம்
கேதார கௌரி விரதம்
ஆறுபடை வீடுகள்

யுத்தத்தின்பின்ஆலயம்

மேலும் படங்கள்வங்கிக்கணக்கு
விபரம் 

கணக்கு இலக்கம் :-70212044
வங்கி:-இலங்கைவங்கி,

ஆலயம் அமைய வழிகாட்டியாக இருந்த 
தவத்திரு

யோகர் சுவாமிகள் 

hnhgg

இந்த இணையத்தளத்தின்  சிறப்பான பார்வைக்கு google chrome இன் மூலம் உலவுங்கள்www.srikanakampikai.com
ஓம் சக்தி
இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் இணையத்தளத்திற்கு 
அன்புடன் வரவேற்கிறோம்...
"
தங்களுக்கு
  அம்பிகையின் நல்லாசிகள் என்றென்றும்  கிட்டுவதாக"

அன்னையருள் அகிலமெங்கும் பரவுக

தனம் தரும் கல்விதருமொருநாளுந் தளர்வறியா 
மனந்தரும் தெய்வவடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா 
இனந்தரும் நல்லன வெல்லாந்தருமன்ப ரென்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே 
---------------------------------------------------------------------------
இரணைமடு திருவருள்மிகு 
கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில் 
ஆண்டுற்சவ சித்திரை பௌர்ணமி பொங்கல் விழா 
அம்பாள் அடியார்களே !
கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு வாவியின் கரைதனில் வாவியை ஆசிர்வதித்தபடி மூர்த்தி தலம்  தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று மூன்று சித்திரத்தேர்களை தன்னகத்தே கொண்ட கனகாம்பிகை அம்பாளின் ஆண்டு பௌர்ணமி பொங்கல் விழா கர வருடம் சித்திரை திங்கள் நான்காம் நாள் (17-04-2011)ஞாயிற்றுகிழமை நடைபெற  திருவருள் கூடியுள்ளது அன்று மாலை 4.00 மணியளவில் அம்பாளின் தீர்த்தமாகிய இரணைமடு வாவியில் இருந்து அடியவர்கள் கும்ப தீர்த்தமெடுத்து வந்து அம்பாளின் பாதார விந்தங்களில் உற்றுகின்ற நிகழ்வும் வளைந்து பானைகளும் ஏனைய பானைக்களுமாக ஆயிரம் பானைகள் வைத்து பொங்க வேண்டுமென்ற தவத்திரு யோகர் சுவாமிகளின் திருவாக்குபடி பொங்கல் நிகழ்வும் இடம்பெற விருப்பதால் அனைத்து அடியார்களையும் இந்த நிகழ்வில் கலந்து அன்னையின் அருள்பெற்றே குமாறு வேண்டுகிறோம் 
நேர்த்த்கிக்கடன்களை பூர்த்திசெய்ய விரும்புகின்ற  அடியார்கள் காலைமுதல் இரவு மணிவரை மேற்கொள்ளலாம் 
:::அடியார்களின் நலன்கருதி போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது
:::பொருட்கள் ஆலயத்தில் வழமைபோல வழங்குவதற்கு ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
புனருத்தானம் (பாலஸ்தாபனம்) 

நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் சேதத்துக்குள்ளான அன்னையின் ஆலயத்தினை புனரமைத்து குடமுழுக்குசெய்வதற்கு அன்னையின் திருவருள் கைகூடியுள்ளது  இந்தவகையில் அதற்க்கு ஏதுவாக கடந்த 29/01/2010 வெள்ளிக்கிழமை அன்று ஆலயத்தில்புனருத்தானம் (பாலஸ்த்தாபனம்)இடம்பெற்றுள்ளது  அதனை அடுத்து  ஆலய திருப்பணிகள் இடம்பெற்று அவை பூர்த்தி அடைந்தவுடன் அன்னையின் ஆலயத்திற்கு நான்காவது குடமுழுக்குஇடம்பெறும் என்பதை அம்பிகை அடியார்களுக்கு  மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம் .

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

"இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் "
"பாலஸ்தாபன அறிவித்தலும், திருப்பணி நிதிக்கோரிக்கையும்"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
யாழ்ப்பாண சித்தர் பரம்பரை தவமுதல்வர் யோகர் சுவாமிகளே இக்கோவிலின் கருவறை நிலையத்தினையும் மூலமூர்த்தியையும் முடிவு செய்தவர் இவற்றை செயற்படுத்தியவர்கள்  சுவாமிகளின் தொண்டரும் யாழ் அரச அதிபருமாகிய அமரர் ம.ஸ்ரீகாந்தா அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட திருப்பணி சபையினர் இவர்களின் முயற்சியால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இக்கோவில். யோகர்சுவாமிகளின் ஆசிர்வாதத்துடன் 1961ஆம் ஆண்டு திருக்குடமுழுக்கு செய்யப்பட்ட இவ்வாலயம் அதன்பின்னர் முறையே1981,1996 ஆம் ஆண்டுகளில் குடமுழுக்கு செய்யப்பட்டு மூன்று தேர்களும் கண்டு மூர்த்தி தலம் தீர்த்தம் முப்பெருமைகளையும் கொண்டு வன்னி பெருநிலப்பரப்பில் பாரிய வளர்ச்சி கண்ட கோவிலாக மிளிர்ந்தது இப் பெருங்கோயிலாகும்.

கடந்த நீண்ட கால அமைதி இன்மையால் ஆலயத்தில் இரண்டு முறை வழிபாடு பூசைகள் தடைப்பட்டுள்ளன இத்தடைகளை இடப்பெயர்வுகள் ஏற்ப்படுத்தின 1996ம் ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் உடனடியாக பூசைகளை ஏற்பாடு செய்ய முடிந்தன 2008ம் ஆண்டு இடப்பெயர்வின்பின்னர் இப்போதுதான்(2010) அறங்காவலர் சபையினரால் கோவிலை பொறுப்பேற்க கூடியதாக இருந்தது கோவிலில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பரிவார கோவில்களும் புனரமைக்க வேண்டியுள்ளன முன்னர் 1996ம் ஆண்டு குடமுழுக்கு நிகழ்ந்துள்ளதால் இனிரும் ஆண்டு திருக்குடமுழுக்கு அமைய வேண்டிய காலமாக உள்ளது.

இந்நிலையில் 29/01/2010 இல் புனருத்தானம் (பாலஸ்தாபனம்) சிறப்பாக நடந்தது பின்னர் ஆரம்பமான திருப்பணி வேலைகள் துரிதமாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றது 
இதுவரையில் ரூபா 03.05மில்லியன் செலவாகியுள்ளது இத் திருப்பணிகளுக்கு பலமில்லியன் ரூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இக் கோவிலின் அருமை பெருமைகளை தெரிந்த வெளிமாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் உள்ள அன்பர்கள் அம்பிகை அடியார்களின் நிதியினை கொண்டுதான் இப்பணியை நிறைவு செய்யலாம் என நம்புகிறோம் அம்பாள் அடியார்கள் மனமுவந்து நிதியாகவோ பொருளாகவோ அளிக்கும் படியும் வேறு வழிகளில் உதவ முன்வரும் அன்பர்களிடம் இருந்தும் நிதியுதவி கேட்க்க பெற்று எமக்கு ஆதரவு நல்கும் படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம் இக்கோவில் வங்கி சேமிப்பு கணக்கின் இலங்கை வங்கி- கிளிநொச்சி கிளையில் 

70212044 என்ற கணக்கிலக்கத்தில் வைப்பு செய்தும் உதவ முடியும் 

"அம்பாள் பணியில் அனைவரும் இணைவோம் அனைவரையும் இணைப்போம்" 
அம்பாள் பணியில் தங்கள் உதவியை வேண்டி நிற்கும் 
ஆ.க.செல்வவிநாயகம்( தலைவர் )
ந.சிவகுமார் (செயலாளர்) 
மு.இராமச்சந்திரன் (பொருளாளர்) 
நா.சோதிநாதன் (நிர்வாக செயலாளர்)  
அறங்காவலர் சபை 
இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் 
இரணைமடு 
கிளிநொச்சி
தொலைபேசி:-0094-21-5200561முகப்பு|ஆலயம்பற்றி| தொடர்புகளுக்கு| புகைப்படங்கள்| அமைவிடம்
இணையத்தள தொடர்பு மின்னஞ்சல் srikanakampikai@gmail.com 

2009-2011 © srikanakampikai.com All Rights Reserved. 
  
Make a free website with Yola