புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பஷ மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்திபெருவிழா 

ஆலய மகா கும்பாபிஷேகமானது கடந்த யனவரி மாதம் முப்பதாம் திகதி திங்கட்கிழமை சிவஸ்ரீ ஆதி சவுந்தர ராஜ குருக்கள் தலைமையில்  இனிதே நிறைவுபெற்றது யனவரி மாதம் 26ம் திகதி வியாழக்கிழமை கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க கிரியைகள் யாவும் ஆரம்பமாகி தொடர்ந்து யனவரி29 ம திகதி ஞாயிற்று கிழமை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது இந்நிகழ்வில் அம்பிகையின் பேரருளை பெற்று கொள்ளுவதற்காக  இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அம்பிகை அடியார்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது யனவரி மாதம் 30 திகதி திங்கட்கிழமை மீனலக்கின சுபமுகூர்த்த வேளையில் கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகி காலை 09 மணி 10 நிமிடமளவில் பிரதான தூபிக்கான அபிடேகம் இடம்பெற்று அதனை தொடர்ந்து பிரதான கும்பமானது வேத மந்திரங்கள் மங்கல வாத்தியங்கள்  முழங்க அடியவர்களின் அரோகரா கோசங்கள் முழங்க வீதிவலம் வந்து அம்பிகைக்கு அபிஷேகம்  இடம்பெற்று அதனை தொடர்ந்து பூசை இடம்பெற்று கும்பாபிஷேக கிரியைகள் இனிதே நிறைவு பெற்றன தொடர்ந்து இரவு நவசக்தி அர்ச்சனை இடம்பெற்று வசந்தமண்டப பூசை இடம்பெற்று அம்பிகைக்கு திருவூஞ்சல் இடம்பெற்று தொடர்ந்து அழகிய பூந்தண்டிகையில் அம்பிகை விநாயகர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சகிதம் வெளிவீதி வலம் வரும் நிகழ்வும் இடம்பெற்று அன்றைய பூசைகள் யாவும் நிறைவடைந்து. 

 

Make a free website with Yola