ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி சங்காபிஷேக பெருவிழாவும் குடமுழுக்கு சிறப்பு நூல் வெளியீடும்  

30-01-2012 அன்று ஆலயத்தில் இடம்பெற்ற மகாகும்பாபிஷேகத்தினை தொடர்ந்து 48நாட்கள் நடைபெற்ற மண்டலாபிஷேகத்தின் இறுதிநாளான சங்காபிஷேக பெருவிழா கடந்த17-03-2012 அன்று சனிக்கிழமை காலை 07.30 மணிமுதல் விநாயகர் வழிபாடு யாகசாலா பிரவேசம் யாகபூஜை சங்குபூஜை விசேட திரவிய கோமம் திரவிய அபிஷேகம் கும்ப உத்தாபனம் சங்காபிஷேகம் என்பன இடம்பெற்று பகல் மணிக்கு விசேட பூஜை இடம்பெற்று மகேஸ்வர பூசை என்பன இடம்பெற்று பகல் பூசைகள் நிறைவுற்று மாலை விசேட வசந்தமண்டப  பூசை இடம்பெற்று திருவூஞ்சல் இடம்பெற்று athanayadththu அம்பிகை விநாயகர் சுப்பிரமணியர் சமேதராக அழகிய பூந்தண்டிகையில் வீதியுலா வந்ததை தொடர்ந்து 
பிரசாதம் வழங்கலுடன் அன்றைய பூசைகள் நிறைவுற்றன 
குடமுழுக்கு சிறப்பு நூல் வெளியீடு 

ஆலய கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு ஆலய குடமுழுக்கு சிறப்புமலர் ஒன்று அன்று வெளியிடப்பட்டது ஆலயதகவல்கள் சக்தி வழிபாடு பற்றிய கட்டுரைகள் ஆலயத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளில் நிழற்பட தொகுப்பு மற்றும் அறிஞர் ஆன்மீக வாதிகளின் கட்டுரைகள்  போன்ற பல விடயங்களை தாங்கி இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது ஆலய அறங்காவலர் சபை தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல அடியார்கள் பங்கு கொண்டு இந்நூலை பெற்று சென்றனர் 

 

Make a free website with Yola