"ஒன்பது இரவுகள் உணர்த்தும் ஒப்பற்ற உண்மை"  

 

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்கு சோதித்தாலும் எளிதில் அகப்படாதவன் ஆண்ட வன். அவன் இன்ன தன்மையன், இந்நிறத்தவன், இவ்வண்ணத்தவன் என்று எழுதிக்காட்ட முடி யாது. இத்தகைய இறைவனுக்கு ஒரு நாமமோ ஒரு உருவமோ இல்லை. எனினும் வாழையடி வாழையாக வந்த அடியார் திருக்கூட்டம் அவனுக்குப் பல்பெயர் சூட்டியும் பல வடிவம் அமைத்துமே அமைதியும் உள்ள நிறைவும் பெற்றுள்ளனர். இப்பேருண்மையைத் தான் தேன் கலந்த வாசகம் தந்த வான் கலந்த மணிவாசகர் ஒரு நாமம் ஓருருவம் ஒன்று மில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ என்று பாடி இன்பம் காண்கிறார்.

ஆயிரம் திருநாமம் பாடி அமைதி காண்போமாக

ஒரு உருவமோ ஒரு வடிவமோ ஒரு பெயரோ அற்ற இதே இறைவன்தான் வேண்டுவார் வேண்டுவதை ஈயும் நோக்குடன் அடியார்கள் வேண்டும் வடிவிற் சூட்டும் பெயரில் காட்சியளித்து அருள்புரிகிறான். இதை நானாவித உருவாய் நமையாள்வான் பல வேடம் ஆகும். பரன்தாரி பாகன் என்று பக்திச் சுவை நனிசொட்டும் தேவாரப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

தாய் வடிவம் தாங்கிய இறைவன்

இவ்விறைவன் தந்தை வடிவிலும் காட்சியளிப்பான். தாய் வடிவிலும் காட்சியனிப்பான். ஆனால் அவன் தாயின் வடிவில் காட்சியளிப்பது உள்ளத்தைப் பெரிதும் உருக்குகிறது. நம் தமிழ் ஞான சம்பந்தன் தனது திருகோணமலை பதிகத்தில் தாயினும் நல்ல தலைவன் என்று இறைவனை விழித்து தாய்க்கு மேலாக இறைவனைக் கண்டு இறைஞ்சுகிறார்.

நம் மணிவாசகரோ ‘அம்மையே அப்பா’ என்று அம்மைக்கு முதன்மை இடம் கொடுப்பதைப் பார்க்கிறோம். இதே மணிவாசகப் பெருந்தகை பால் நினைந்தூட்டும் தாய் என்றும் தாயாய் முலையைத் தருவாய் என்றும் இறைமையைத் தாயின் வடிவிற் கண்டு உருகும் காட்சியைக் காண்கிறோம். நம் ஔவைப் பிராட்டியும் ‘தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை’ என்று கூநிய பின்புதான் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று நவின்று செல்வதைக் காண்கிறோம்.

உலகியல் நிலையிலும் எம் மொழியை, எம் நாட்டைக் குறிக்கின்றபோது தாய்மொழி, தாய் நாடு என்றே குநிப்பிடுகிறோம்.

ஆங்கிலத்திலும் மொழியை நாட்டைக் குறிக்க (mother tongue, mother land) என்றே சொல்வதைப் பார்க்கிறோம். எனவே பெண்மை வெல்க என்று உத்திருவோமடா என்று பாரதி பாடிச் சென்றதிலும் பொருள் உண்டு என்பதை யாம் உணர்கிறோம்.

மொஹஞ் சதாரோ, கரப்பா புதைபொருள் ஆய்வுகள் இறைவனை தோற்ற வடிவில் சக்தி என முந்தையோர் வழிப்பட்டதற்கு சான்றுகள் பல உண்டு. இத் தொன்மைமிக்க சக்தி வழிபாட்டை உணர்த்தி நிற்பது தான் ஒன்பது இரவுகளை உணர்த்தும் நவராத்திரி விழா. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவ்வுலகை ஏதோ ஒரு சக்தி இயக்கிக் கொண்டுதான் இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த அறிவியல் அறிஞன் ஒருவர் தன் அணு ஆய்வில் துருவித்துருவி ஆராய்ந்தபோது தான் மேற்கொண்டு ஆய்வு செய்ய முடியாமல் ஏதோ ஒரு சக்தி தடுக்கிறது என்று கூறியுள்ளார். இதைத்தான் அணுவிற்குள் அணுவாய் கோளுக்குள் கோளாய் இறைவன் எம்மை இயக்குகிறான் என்று 9ம் நூற்றாண்டில் திருவாதவூரடிகள் திறம்பட எடுத்து இயம்பியுள்ளார்.

பாரதிதாசன் கண்ட சக்தி

கடவுட் கொள்கையை ஏற்பதில் தயக்கமும் மறுப்பும் காட்டிய பாரதிதாசன் தன்குரு பாரதி முன்னிலையில் சக்தி பற்றிப் பாடிய பாடல் இதோ

‘எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி

எழுகடல் அவன் வண்ணமடா அங்குத்

தங்கும் வெனியினிற் கோடியண்டம் - அந்தத்

தாயின் கைப்பந்தென ஓடுமடா - ஒரு

கங்குலில் ஏழு முகிலினமும் வந்து

கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ? எனில்

மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்

மந்த நகையங் மின்னுதடா!

உலகை ஏதோ ஒரு சக்தி எம் சொற்பதம் கடந்த நிலையில் இயக்குவதற்கு பாரதிதாசனின் பாடல் சான்று பகருகின்றது.

பாரதி கண்ட பராசக்தி

பாட்டிற்கொரு புலவன் பாரதி பராசக்தியின் பக்தன். இச்சக்தி வழிபாட்டில் அவள் மூழ்கித் திளைத்திருந்திருந்தான். சக்தி வாய்ந்த பாடல்களை எமக்குத் தந்ததோடு சக்தியிழந்த தமிழகத்திற்கு மீண்டும் சக்தியூட்டினால் ஆதி சிவனுடைய சக்தி எங்கள் அன்னையருள் பெறுதல் முக்தி என்று கூறி அவள் காலம் தாழ்த்தாது மீதி உயிரிருக்கும் போதே அதை வெல்லல்  யுகத்தினுக்கு யுக்தி என்று கூறும் அவள் சக்தியின் உட்பொருளை பின்வரும் முறையில் விளக்குகிறாள்.

மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று - அந்த

மூலப்பொருள் ஒளியின் குன்று

நேர்த்தி திகழும் அந்த ஒளியை - எந்த

நேரமும் போற்று சக்தி என்று சக்தி

வழிபாட்டினால் பெறும் பெரும் பயன்களை ஏற்றமுற

எடுத்துரைக்கிறான்

இச்சக்தி மூன்று வடிவில் உருவகப்படுத்தப்பட்டு நவராத்திரி விழாவாக மலர்ந்துள்ளது. முதல் மூன்று நாட்கள் வீரத்தின் விளைநிலமாக மலைமகள் வழிபடப்படுகிறாள். இடையில் மூன்று நாட்கள் செல்வத்தின் வடிவில் திருமகள் வழிபடப்படுகிறாள். இறுதி மூன்று நாட்கள் கலையின் வடிவமாக, கல்வியின் வடிவமாக கலைமகள் வழிபடப்படுகிறாள். எம் வாழ்வு முழுமை பெற வேண்டின், நிறைவுபெற வேண்டின் எமக்கு வீரம் வேண்டும். எம் வீரத்தை முறையாகப் பயன்படுத்த செல்வம் வேண்டும். இவ்விரண்டிலும் நாம் செம்மைகாண கல்வியும் கலைகளும் எம்மை வழி நடாத்த வேண்டும். இம்மூன்நிலும் நாம் பெற்ற வெற்நியை நிலைநாட்டுவதுதான் விஷய தசமி. விஷய தசமி என்பது வெற்றிக்குரிய பத்தாவது நாளைக் குறித்து நிற்கும்.

நவராத்திரி நவிலும் நற்கருத்துக்கள் பல எனினும் இன்றைய சூழ்நிலையில் குமர குருபன் வழியில் நாம் நாடி நிற்பது கண்  கண்ட தெய்வமாகிய கலைமகனின் அருளையே.

எனவே அளிக்கும் செழுந்தமிழ்த் தென்னமுதை வழங்கிய எம் உள்ளத்தில் குடியிருக்கும் குமரகுருபரரின் பின்வரும் பாடலைப் பாடி நிறைவு காண்போமாக.


மண் கண்ட வெண்குடைக் கீழாக மேம்பட்ட மன்னருமென்

பண்கண்டளவிற் பணியச் செய்வாய்ப் படைப்போன் முதலாம்

விண்கண்ட தெய்வம் பல் கோடியுண்டேனும் விளம்பிலுன் போற்

கண்கண்ட தெய்வமுள்ளதோ சகல கலாவல்லியே!

 
  முகப்பு                                                     
கட்டுரை தொகுப்பிற்குதிரும்ப

 

Make a free website with Yola